நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்! பிரதமர்

Share Button

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமர் ஒருவருடன் அரசாங்கத்தை அமைப்பதற்கான காரணத்தை ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் வளம் வெளிநாட்டுகளுக்கு விற்கப்படுகினறமை, பொதுமக்கள் மீதான வரிச்சுமை, எரிபொருள் விலை அதிகரிப்பு, மத்திய வங்கியில் இடம்பெற்ற கொள்ளை , முதலீட்டாளர்களிடம் பாரிய அளவிலான இலஞ்சம் கோரியமை போன்ற காரணங்களினால் கடந்த அரசாங்கம் நாட்டை சிக்கலுக்கு உள்ளாக்கியதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இது நாட்டு மக்களுக்கு மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 26 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் பாரிய அழுத்தங்களுக்கு முகம் கொடுத்திருந்தார்கள்.

இதனால் ஐக்கிய தேசிய கட்சி நியமித்த பொருளாதார குழுவை கலைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்படவிருந்த மோசமான அனர்தத்தை தடுக்க முடிந்திருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் கடந்த அரசாங்கம் 21 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெற்று நாட்டை கடன் குழிக்குள் தள்ளிவிட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

கடந்த அரசாங்கத்தினால் நாட்டு மக்களின் பிரச்சினைகளைத்  தீர்க்க முடியாது என்பதை தெரிந்து கொண்ட ஜனாதிபதி தமக்கு பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்ததாகவும், மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

தற்போது அமைக்கப்பட்டிருப்பது இடைக்கால அரசாங்கமே என்றும் பிரதமர் தெரிவித்தார். பொதுத் தேர்தல் வரை மாத்திரமே இந்த அரசாங்கம் இயங்கும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பை 225 உறுப்பினர்களுக்கு வழங்காது, 150 இலட்சம் மக்களுக்கு வழங்குவது பொருத்தமானதாகும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பிரதமர் ஒருவரை தெரிவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உள்ளது. அந்த அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. சபாநாயகர் தமது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துகிறார்.

பொதுத் தேர்தலே மக்களின் கோரிக்கையாகும். தமது விருப்பத்திற்கு அமைய அரசாங்கத்தை அமைக்க கைகோர்த்து செயற்படுமாறு பிரதமர் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11