காலநிலை: கரையோர மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!

Share Button

காலநிலை சீரடையும் வரை மன்னார் முதல் காங்கேசந்துறை வரையிலான கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கஜ சூறாவளியால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் கருத்திற்கொண்டுஇ இங்கிருந்து நேற்று பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்தார்.

இங்கு நேற்று தொடக்கம் கடும் காற்றுடன் அடைமழை பெய்வதாக திரு. கொடிப்பிலி கூறினார். அவர் இன்று அதிகாலை விடுத்த அறிவித்தலில் இந்த விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

வங்காள விரிகுடாவில் உருவான கஜ சூறாவளி இன்று அதிகாலை 2.00 மணியளவில் பாண்டிச்சேரி ஊடாக தமிழகத்திற்குள் பிரவேசித்துள்ளது.

இந்த சூறாவளி அடுத்து வரும் ஆறு மணித்தியாலங்களில் நலிவடைந்து மேற்குத் திசை நோக்கி நகருமென எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் இன்று காலை காற்றுடன் மழை பெய்யலாம்.

யாழ்ப்பாண குடநாட்டில் மணிக்கு 80 முதல் 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம்.

சில சமயங்களில் காற்றின் வேகம் 100 கிலோமீற்றர வரை அதிகரிக்க கூடும். மன்னார், புத்தளம், திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை, முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களில் கடும் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடமாகாணத்தில் கடும் காற்றுடன் அடைமழை பெய்யலாம். யாழ் குடாநாட்டிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 150 மில்லிமீற்றர மழைவீழ்ச்சி எதிர்பார்கப்படுகிறது.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடலில் மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசலாம்.

காற்றின் வேகம் மணிக்கு 110 கிலோமீற்றர் வரை அதிக்க கூடும் என்பதால் கடல் கொந்தளிப்பதாக மாறக்கூடும்.

கஜ சூறாவளியின் தாக்கங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென இடர்காப்பு முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை – மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாலுள்ள கடற்பரப்பில் கடற்றொழிலுக்குச் செல்ல வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

சில சமயங்களில் மரங்களும்இ மின்கம்பங்களும் முறிந்து விழலாம். இது குறித்து அவதானம் தேவை.

தொலைபேசி ஊடாக அவசர உதவிகளைப் பெறலாம் இதற்காக அழைக்க வேண்டிய இலக்கம் 117 என்பதாகும்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11