பாராளுமன்றில் குழப்பம்: அமர்வு 19 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பு!

Share Button

பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 1.30 அளவில் பாராளுமன்றம் கூடவிருந்தது.

எனினும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் குழப்ப நிலை காரணமாக சபையை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

சபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று பாராளுமன்ற அமர்வின்போது சபைக்குள் கத்தியை கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டதன் காரணமாக பாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் ஆசனத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.

கடும் குழப்பநிலைக்கு மத்தியில் ஜேவிபியின் பாராளுமன்ற் உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரின் மீது மிளகாய் தூள் வீசியப்பட்டது.

இதன் காரணமாக பாராளுமன்றத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.

பின்னர் பொலிசாரின் பாதுகாப்புடன் சபைக்குள் வந்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான குறுக்கீடுகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *