கலிபோர்னியாவில் தீ: ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரில் பார்வையிட்டார்!

Share Button

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பரவியுள்ள மிக மோசமான காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

கலிபோர்னியாவின் தெற்கு பகுதிக்கு நேற்று (17) சென்ற ஜனாதிபதி ட்ரம்ப், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.

முன்னதாக சான் பிரான்ஸிஸ்கோவிற்கு வடக்கே அமைந்துள்ள சியெர்ரா மலைப்பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி ட்ரம்ப் அங்கு நிலைமைகளை பார்வையிட்டதோடு, அதிகாரிகளை சந்தித்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

அத்தோடு, கலிபோர்னியா ஆளுநர் ஜெர்ரி பிரவுனையும் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தார்.

கடந்த 8ஆம் திகதி பரவத்தொடங்கிய குறித்த காட்டுத்தீயில் இதுவரை 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு, சுமார் 10,000 வீடுகளும் சுமார் 2,500 கட்டடங்களும் சேதமடைந்துள்ளன.

சுமார் 1000 பேரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

காடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் முறையற்ற நிர்வாக கட்டமைப்பே காட்டுத்தீ பரவ காரணம் என ஜனாதிபதி ட்ரம்ப் ஏற்கனவே குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதேவேளை, காலநிலை மாற்றத்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் வெப்பம் அதிகரித்து வறட்சி ஏற்பட்டுள்ளது.

இதுவே காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவுவதற்கு காரணமென விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *