தற்போதைய அரசியல் பிரச்சனைக்கு சபாநாயகரும் ஐக்கிய தேசிய கட்சியுமே காரணம்!

Share Button

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் உரையாற்றினார்;.

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு முரணாக செயற்பட்டுள்ளார் என்று அவர் சாடினார்.

பல சந்தர்ப்பங்களில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பக்கச்சார்பாக திரு.கரு ஜயசூரிய செயற்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்குலக சக்திகள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தாளத்திற்கு நடனமாடாமல் பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு இணங்க சபாநாயகர் செயற்பட வேண்டும் என்று, திரு.சேமசிங்க கேட்டுக் கொண்டார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த அரசாங்கத்தின் போது நாட்டில் இடம்பெற்ற வேலைநிறுத்த போராட்டங்கள், பொருள் விலையேற்றங்கள், எரிபொருள் விலையேற்றம் போன்ற விடயங்களுக்கு குரல் எழுப்பாத தமிழ் தேசிய கூட்டமைப்பும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனநாயகம் பற்றி பேசுவது கேலிக்கூத்தாக உள்ளது என்று இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன குணசேகர தெரிவித்தார்.

திரு. ரணில் விக்ரமசிங்க இல்லாமல் தமக்கு எதுவித அதிகாரமும் இல்லை என்பதை இந்த இரண்டு கட்சிகளும் நன்கு உணர்ந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதனாலேயே திரு.ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்கு இந்தக் கட்சிகள் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

திரு மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக பதவியேற்ற பின்னர், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கும் வரிச்சுமையை குறைப்பதற்கும் மேற்கொண்ட நடவடிக்கைகளை ஐக்கிய தேசிய கட்சியினருக்கு பொறுக்க முடியாதுள்ளது.

சபாநாயகரின் தான்தோன்றித்தமான செயற்பாடு காரணமாக பாராளுமன்ற பாரம்பரியங்கள் மீறப்பட்டுள்ள என்று இங்கு உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகள் நீடிக்குமாயின் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வது குறித்து மீள்பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது விடயம் குறித்து ஆராய்வதற்கு நாளை காலை அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டம் ஒன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறும்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11