இன்று மீலாதுன் நபி விழா

Share Button

இன்று முஸ்லிம்கள் இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த தினமான மீலாத் தினத்தை கொண்டாடுகிறார்கள்.

ஆயிரத்து 400 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியாவில் பிறந்த நபிகள் நாயகம் உலகில் நிலவிய அறியாமை இருளை நீக்கி வெளிச்சத்தை ஏற்படுத்திய துதராவார்.

முஸ்லிம்களின் இறுதித் தூதரான நபிகள் நாயகம் சமூக நீதி, பெண் விடுதலை, அடிமை ஒழிப்பு போன்றவற்றுக்காக ஆற்றிய சேவைகள் ஏராளம்.

புனித நூலான அல்குர்ஆனின் வழிகாட்டலில் அறியாமை சமூகத்தை அறிவார்ந்த சமூகமாக நபிகள் நாயகம் மாற்றியமைத்தார்கள்.

‘மனித நேயத்திற்காக அர்ப்பணித்து குரோதத்தை ஒழிக்க திடசங்கற்பம்’ – ஜனாதிபதி

மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வாழ்த்துச் செய்தியை அனுப்பிவைத்துள்ளார்.

மனித நேயத்திற்காக அர்ப்பணித்து குரோதத்தை இல்லாதொழிக்க சகலரும் திடசங்கற்பம் பூணுவது அவசியம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நபிபெருமானாரின் போதனைகள் ஒரு மனிதர் மற்றவரை விட இத்தாலோ, சாதியாலோ, நிறத்தாலோ உயர்ந்தவர் அல்ல என்ற மகோன்னத சமத்துவ கோட்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ளன.

நெருக்கடி நிலவிய யுகத்தில் மனிதப் பெறுமானங்களையும், மனித நேயத்தையும் மேம்படுத்தும் முயற்சியில் நபி பெருமானார் பங்களிப்பு நல்கிய விதம் அனைவருக்கும் முன்னுதாரணம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

‘வறியவர்க்கு உதவும் கடமைகளை நிறைவேற்றுவோம்’ – பிரதமர்

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமிய நாடுகளும் சர்வதேச அமைப்புக்களும் இலங்கைக்கு நிபந்தனையின்றி ஆதரவு வழங்குவதாக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒத்துழைப்பிற்கு நபி பெருமானாரின் பிறந்த தினத்தன்று நன்றி தெரிவிப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வறியவர்களுக்கு உதவுதல் என்பது நபி பெருமானாரின் முக்கியமான போதனையாகும்.

இன்றைய தினத்தில் அதனை அர்த்தமுள்ளதாக்க பாடுபட வேண்டும். இஸ்லாம் போதித்த சகவாழ்வையும் வலுவூட்டுவது அவசியம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *