சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கை: விலகுவது பற்றி பரிசீலிக்கும் மாலைதீவு அரசு

Share Button

சீனாவுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் இருந்து விலகுவது பற்றி மாலைதீவு அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் தெரிவித்துள்ளார்.

இந்த உடன்படிக்கை பாரபட்சமானது. எனவே, வர்த்தக உடன்படிக்கையை அமுலாக்க வழிவகுக்கும் சட்டத்தை மாலைதீவு பாராளுமன்றம் நிறைவேற்ற மாட்டாது என நஷீத் தெரிவித்தார்.

அவரது சகாவான இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்; ஜனாதிபதியாக பதவியேற்ற சில தினங்களுக்குள் இந்தக் கருத்து வெளியாகிறது.

கடந்த செப்டெம்பர் மாத தேர்தலில் போட்டியிடுவதற்கு மொஹமட் நஷீத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவர் இப்ராஹிம் சோலிஹ்யின் ஆலோசகராக கடமையாற்றுகிறார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11