யெமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவிப்பு!

Share Button

சவுதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியக் கூட்டணி போர் நிறுத்ததத்தை மேற்கொள்ளுமாயின் யெமன் மக்களின் சமாதானத்தை கருத்தில் கொண்டு தாமும் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தயார் என ஹூதி கிளர்ச்சிப்படையின் உயர்மட்ட உறுப்பினரான மொஹம்மட் அலி அல் ஹூதி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தூதருடனான பேச்சுவார்த்தைகளை அடுத்து ஐ.நா.வின் முயற்சிகளை ஆதரித்து தமது நல்ல நோக்கங்களை நிரூபிப்பதற்காகவும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாக மொஹம்மட் அலி அல் ஹூதி அறிவித்துள்ளார்.

அரசாங்கக் கூட்டணிக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட பலமுயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஐக்கிய நாடுகள் சபையினால் சுவீடனில் நடத்தப்படவுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இருதரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *