இங்கிலாந்தில் உள்ளுர் நிருபர்களுக்கு பயிற்சி அளிக்கும் பேஸ்புக் நிறுவனம்!

Share Button

சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் இங்கிலாந்திலுள்ள உள்ளூர் சமூகங்களில் பணியாற்றுவதற்காக நிருபர்களுக்கு பயிற்சியளிக்கும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்காக பேஸ்புக் நிறுவனம் £4.5 மில்லியன் நிதியினை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 80 பேருக்கு இரண்டு வருடங்களுக்கு சமூக நிருபர்களுக்கான பயிற்சி வழங்கப்படும்.

இத்திட்டம் பத்திரிகையாளர்களுக்கான தேசிய கவுன்சிலால் நிர்வகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டத்திற்காக இங்கிலாந்தின் உள்ளூர் செய்தித்தாள் வெளியீட்டாளர்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பேஸ்புக்கின் அணுகுமுறை தொடர்பில் அதிகரித்து வரும் விமர்சனங்களுக்கு மத்தியில் இத்திட்டத்தை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகிள் மற்றும் பேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் பிரித்தானியாவிலுள்ள உள்ளூர் பத்திரிகைகளுக்கு ஆதரவாக முதலீடு செய்ய வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *