வீடற்றவர்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில், மெக்சிக்கோ அணி சம்பியன்..!

Share Button

வீடற்றவர்களுக்கான உலகக்கிண்ண கால்பந்து தொடரில், மெக்சிக்கோ அணி சம்பியன் பட்டத்தை சுவிகரித்துள்ளது.

ஆண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், கொலம்பியா அணியை 5-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி மெக்சிக்கோ அணி, மூன்றாவது சம்பியன் பட்டத்தை வென்றது.

அதேவேளை பெண்களுக்கான கால்பந்து தொடரின் இறுதி போட்டியில், சிலி அணியை 6-3 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பெண்கள் மெக்சிக்கோ அணி, மூன்றாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது.

இதற்கு முன்னதாக பெண்கள் மெக்சிக்கோ அணி, கடந்த 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடற்றவர்களுக்கான கால்பந்து உலகக்கிண்ணம் 16ஆவது முறையாக தற்போது மெக்சிக்கோ சிட்டியில் கடந்த 16ஆம் திகதி ஆரம்பமானது. இந்த தொடரில், 500 இற்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் அடங்களாக 48 அணிகள் பங்கேற்றன.

இதுவரையில் நடைபெற்ற 16 உலகக்கிண்ண தொடரில், பிரேஸில் அணி மூன்று முறை சம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது இந்த பட்டியலில் மெக்சிக்கோவும் இணைந்துள்ளது.

மேலும், இத்தாலி, ஸ்கொட்லாந்து, சிலி, ஆகிய அணிகள் இரண்டு முறைகளும், ஆஸ்திரியா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான், உக்ரைன், ஆகிய அணிகள் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11