ஐக்கிய தேசிய முன்னணியும் நாளை தமது பிரதிநிதிகளை பெயரிடவுள்ளது!

Share Button

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று அலரி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்றது.

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஸிம் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாளைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதிநிதிகள் பெயரிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *