பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மீண்டும் இணைகிறது மாலைதீவு!

Share Button

பொது நலவாய நாடுகள் அமைப்பில் மீண்டும் இணைந்து கொள்ள மாலைதீவின் புதிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் இனிவரும் கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுநலவாயப் போட்டிகளிலும் பங்குகொள்ள தீர்மானித்துள்ளதாக புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம்

மொஹமட் சொல்ஹியின் (Ibrahim Mohamed Solhi) அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

115 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையில் இந்த இணைவு குறித்து ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

1982ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி பொதுநலவாய நாடுகள் அமைப்பில் மாலைதீவு இணைந்தது.

எனினும், உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி அந்த அமைப்பிலிருந்து மாலைதீவு விலகியமை குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *