ஸ்பெயினின் கரையோரங்களை தாக்கிய கடும் புயல்.. பெண்ணொருவர் பலி!

Share Button

ஸ்பெயினின் கடற்கரையோரப் பகுதிகளை தாக்கிய கடும் புயல் மற்றும் கன மழையில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஆறுகள் பெருக்கெடுத்து லூகோ நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

நேற்று (19) வரை தொடர்ந்த மோசமான காலநிலையின் எதிரொலியாக வாலென்சியா மற்றும் அலிகன்டே ஆகிய பிராந்தியங்களுக்கு ஸ்பெயின் தேசிய வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது

இதேவேளை, தீவிர அபாய நிலையை எதிர்நோக்கும் மல்லோர்கா பிராந்தியத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கையும், தெற்கு ஸ்பெயினின் பலேரிக் தீவுகள் மற்றும் முர்சியாவின் எஞ்சிய பகுதிகளுக்கு அபாயகரமான மூன்றடுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மழையுடன் கூடிய மோசமான காலநிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *