கிழக்கு இந்தோனேசியா:திமிங்கலத்தின் வயிற்றில் 6 கிலோ பிளாஸ்ரிக்..

Share Button

கிழக்கு இந்தோனேசிய கரையோரத்தில் கரையொதுங்கிய இறந்த திமிங்கலமொன்றின் வயிற்றிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் காணப்பட்டுள்ளன. இவற்றின் எடை சுமார் ஆறு கிலோவாகும்.

இந்தோனேசியாவின் சுலாவெசி மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியிலுள்ள கபோடா கடலருகே நேற்று மன்தினம் 31 அடி நீளமுடைய குறித்த உயிரற்ற திமிங்கலம் கரையொதுங்கியுள்ளது.

இதன் வயிற்றிலிருந்து 115 பிளாஸ்டிக் கப்இ 25 பிளாஸ்டிக் பைகள்இ நான்கு பிளாஸ்டிக் போத்தல்கள் 2 பிளாஸ்டிக் காலணிகள்இ நைலோன் சாக்குகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் சயன்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வொன்றின்படிஇ 260 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தோனேசியாஇ உலகின் இரண்டாவது மிகப்பெரிய பிளாஸ்டிக் மாசுபடுத்தும் நாடு என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தோனேசியா வருடம் ஒன்றிற்கு 3.2 மில்லியன் டன்கள் பிளாஸ்டிக் கழிவுகளை தயாரிப்பதாகவும் அதில் 1.29 மில்லியன் கடலில் கலப்பதாகவும் ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *