ரொறன்ரோவில் துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை 91 உயர்வு!

Share Button

 

ரொறன்ரோவில் இந்த ஆண்டு துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை தொடர்பில் ரொறன்ரோ மேயர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்காபரோவில் நேற்று முன்தினம் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன், ரொறன்ரோவில் இந்த ஆண்டில் இதுவரை சுட்டுக்கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 91 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 1991ஆம் ஆண்டிலேயே ரொறன்ரோவில் அதிகளவானோர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பதிவுகள் இருந்த நிலையில், தற்போது அந்த பதிவுகளையும் கடந்து இந்த ஆண்டின் துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் ரொறன்ரோவில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் இடம்பெற்ற மோசமான ஆண்டாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரொறன்ரோ மாநகரசபை முதல்வர் ஜோன் ரொறி, ரொறன்ரோவில் இவ்வாறான வன்முறைகளை கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவது தொடர்பில் மத்திய மாநில அரசுகளுடன் பேசி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக் கொலைகளின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டுள்ளமை, தான் உட்பட எவர் ஒருவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையினை மாற்றியமைப்பதற்கு தாம் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும், மக்களின் உதவியுடன் ரொறன்ரோவை பாதுகாப்பான நகரமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *