15 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் திட்டம் விரைவில் ஆரம்பம்!

Share Button

15 ஆயிரம் கல் வீடுகளை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் இடம்பெறும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதல் 25 ஆயிரம் வீடுகளுக்கான அனுமதியின் கீழ் முதல் கட்டமாக உருவாகும் வீடுகளாகும்.

இத்திட்டத்திற்கு ஒப்பதல் அளித்த ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கும் விசேட நன்றிகளை தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் ஊடகங்களுக்கு குறிப்பொன்றையும் அனுப்பியுள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *