பாராளுமன்ற தெரிவுக் குழு: சபாநாயகரின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!

Share Button

பாராளுமன்றம் இன்று காலை 10.30ற்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

கூட்டம் ஆரம்பமான போது, பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கான அங்கத்தவர்களை தெரிவு செய்வது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒரு இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று திரு கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.

அதற்கிணங்க, தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, அதனை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதன் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஐந்து பேரும், ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் ஐந்து பேரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஒருவரும், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஒரு உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாராளுமன்ற பாரம்பரியங்கள் மற்றும் அரசியல் அமைப்புக்கு இணங்க, இந்தத் தெரிவுக் குழுவில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மை அங்கத்தவர்கள் இருத்தல் வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதனால், சபாநாயகரின் இந்தக் கூற்றை தம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சமகால புதிய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவற்றிற்கு தீர்வுகளை வழங்கி, முன்னோக்கிச் செல்கிறது.

சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் அரசியல் அமைப்பின் நிலையியற் கட்டளைகளை மீறிச் செயல்படுவதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன குற்றம் சாட்டினார்.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு மாத காலமாகியும், பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை காண்பிக்க முடியவில்லை என்று இங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பெரும்பான்மையை காண்பிக்க முடியுமானால், அரச தரப்புக்கு முழு அதிகாரத்தையும் வழங்கத் தயார் என்று அவர் குறிப்பிட்டார்.

தமது கட்சிக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒரு அங்கத்தவர் வழங்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரம் குறித்து எவராலும் கேள்வி எழுப்பவோ அல்லது சவாலுக்கு உட்படுத்தவோ முடியாது என்று அமைச்சர் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத் தெரிவுக் குழு அங்கத்தவர்கள் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பொன்றை நடத்தும்படி, பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க சபாநாயகரிடம் கேட்டு;க் கொண்டார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் அமைப்புக்கும், நிலையியற் கட்டளைகளுக்கும் முரணாக செயற்படுகிறார் என்று அமைச்சர் விமல் வீரவங்ச இங்கு தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக் குழு அங்கத்தவர்கள் தொடர்பில் சபாநாயகர் வாக்கெடுப்பொன்றை நடத்தினார்.

இதன் அடிப்படையில், சபாநாயகர் தயாரித்த தெரிவுக் குழு பெயர்ப் பட்டியலுக்கு சார்பாக 121 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன இந்தத் தெரிவுக் குழுவுக்கு சார்பாக வாக்களித்தனர்.

அரசாங்க பாராளுமன்ற உறு;ப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரசாங்க உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடைபெற முன்னரே வெளிநடப்புச் செய்துள்ளன

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *