பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கொடுப்பு சட்டவிரோதமானது!

Share Button

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு சட்டரீதியற்றதென அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அது சபாநாயகரின் விருப்பத்திற்கு அமைய இடம்பெற்றதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்கெடுப்பானது ரணில் விக்ரமசிங்க பலத்தை காண்பிப்பதற்காகவோ அன்றி, புதிய அரசாங்கத்தையோ அல்லது பிரதமரையோ, அதன் மூலம் நியமிக்க முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற கட்டத் தொகுதியில் வைத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அரசியல் அமைப்பு மற்றம் நீதிமன்றத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றதாக அமைச்சர் விமல் வீரவன்ச இதன்போது குறிப்பிட்டார்.

இன்றைய பாராளுமன்ற நிலையியற் கட்டளை மற்றும் சட்ட ஒழுங்குகளுக்கு எதிராக இடம்பெற்றதாகவும் அதனாலேயே ஆளும் கட்சியினர் புறக்கணித்ததாகவும் சட்டரீதியாக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு அரசாங்கம் முகம் கொடுக்க தயார் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் உதயன் கம்மன்பில மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்த்தவும் கருத்து வெளியிட்டனர்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2