பங்களாதேஷ் Vs விண்டிஸ்: 204 ஓட்டங்களை வெற்றி இலக்கு..

Share Button

சிட்டாங்கொங் மைதானத்தில் நடைபெற்றுவரும், முதலாவது டெஸ்ட் போட்டியில், பங்களாதேஷ் அணி, விண்டிஸ் அணிக்கு 204 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

போட்டியின் மூன்றாவது நாளான இன்று, இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வந்த பங்களாதேஷ் அணி, 125 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக மொஹமதுல்லா 31 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் பிஷோ 4 விக்கெட்டுகளையும், ரொஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும், ஜொமால் வோரிக்கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தற்போது, 205 என்ற வெற்றி இலக்கை நோக்கி, விண்டிஸ் அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, தமது முதலாவது இன்னிங்சிறக்காக துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 324 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *