கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறும் இளவரசர் ஹரி – மேகன் மேர்க்கல்..

Share Button

இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன் மேர்க்கல் ஆகியோர் கென்சிங்டன் அரண்மனையில் இருந்து வெளியேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஃபிரோமோர் ஹவுஸிற்கு செல்ல உள்ளதாகவும் தெரியவருகிறது.

இளவரசர் வில்லியமுடன் ஏற்பட்ட முறுகல் நிலையே இதற்கு காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஃபிரோமோர் ஹவுஸில் 10 அறைகள் உள்ளன. அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நபருக்கு அருகில் இருக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிறக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படும் தங்களின் குழந்தைக்காக அடுத்த வருடத்திற்குள் முழுவதுமாக அரண்மனையை விட்டு வெளியேறிவிடுவார்கள் என கூறப்படுகிறது.

இளவரசர் ஹரி தங்களுடைய அறை வில்லியம் – கேட் ஆகியோரின் அறைக்கு அடுத்ததாக இருப்பதை விரும்புவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஃபிரோமோர் ஹவுஸிலேயே இளவரசர் ஹரி – மேர்க்கல் திருமணத்திற்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தங்களுடைய சொந்த பணத்தை பயன்படுத்தியே இளவரசர் ஹரி அந்த அரண்மனையை கொள்வனவு செய்ய விரும்பினார்.

ஆனால் மகாராணி பல பவுண்டுகளை முதலீடு செய்து அதனை முன்னதாகவே கொள்வனவு செய்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-05 | 17:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,800
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 931
புதிய நோயாளிகள் - 03
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 48
நோயிலிருந்து தேறியோர் - 858
இறப்புக்கள் - 11