மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்று!

Share Button

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின்க்கு விதிக்கப்பட்டிருந்த 13 ஆண்டு சிறைத்தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்று நேற்று ரத்துச்செய்துள்ளது.

பயங்கரவாதம் தொடர்பான வழக்கில் அவருக்கு இத்தீர்ப்பு விதிக்கப்பட்டிருந்தது.

மாலைதீவில் ஜனநாயக முறைப்படி தெரிவான மொஹமட் நஷீட் 2012ஆம் ஆண்டு அப்துல்லா யாமீன் ஆட்சியில் கைது செய்யப்பட்டு அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் தன்னைக் கைதுசெய்து தவறான முறையில் சிறைத்தண்டனை விதித்தமை அநீதியானது என்று மொஹமட் நஷீட் தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி அவர்மீது விதிக்கப்பட்ட 13ஆண்டு சிறைத் தண்டனையை ரத்துச்செய்து தீர்ப்பு வழங்கியுள்ளார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *