கஜா புயல் பாதிப்பு: நிவாரணப் பொருட்களுக்கு ரயில் கட்டணம் இல்லை!

Share Button

கஜா புயல் பாதிப்புக்கு உள்ளான மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு ரயிலில் சரக்கு கட்டணம் இல்லை என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயிலில் அனுப்பப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் விலக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு டிசம்பர் 10 வரையில் இந்த விலக்கு வழங்கப்படுகிறது என மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-06 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 178
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 139
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 259
நோயிலிருந்து தேறியோர் - 33
இறப்புக்கள் - 5