ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்குமாறு எஸ்தோனியா கோரிக்கை!

Share Button

ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது.

எஸ்தோனிய பாதுகாப்பு அமைச்சர் ஜூரி லுயிக் இது தொடபில் நேற்று (27) குறித்த கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

உக்ரேனுக்குச் சொந்தமான மூன்று கப்பல்களை ரஷ்யா கைப்பற்றி பணியாளர்களையும் சிறைப்பிடித்துள்ளது.

ரஷ்யாவிற்கு எதிராக எஸ்தோனியா பொருளாதார தடைகளை விதிக்குமாயின் அதற்கு எஸ்தோனியா ஆதரவளிக்கும் என்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயத்தில் உலக நாடுகள் தீவிரமாக உள்ளன என்றும் ரஷ்யாவின் தலைமையை எச்சரிப்பதாக குறித்த தடைகள் அமைய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை உக்ரேன் மீது ரஷ்யா ஏற்கனவே பொருளாதார தடைகளையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *