ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதி படிக்கட்டுகள் ஏலத்தில்..

Share Button

பரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதி படிக்கட்டுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

நேற்று(27) இடம்பெற்ற ஏலத்தில் குறித்த படிக்கட்டானது கணிக்கப்பட்ட விலையை விடவும் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

சுமார் 129 ஆண்டுகள் பழைமையான ஈபிள் கோபுரத்தின் இறுதி இரு மாடிகளை இணைக்கும் படிக்கட்டே நெற்றைய தினம் ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி ஒரு இலட்சத்து 90 ஆயிரத்து 885 அமெரிக்க டொலர் என்ற தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது 25 படிகளைக் கொண்ட இரும்பினால் அமைக்கப்பட்ட 14 அடி உயரமானதாகும்.

குறித்த படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்த மாடிகளுக்கு இடையே மின் உயர்த்தி பொருத்தப்பட்டதை தொடர்ந்து இப்படிக்கட்டு கடந்த 1983ஆம் ஆண்டு அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *