உலக சதுரங்க விளையாட்டு: உலக சம்பியனாக நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென்

Share Button

உலக சதுரங்க விளையாட்டு சம்பியன்ஷிப் போட்டியில்இ நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சென், நான்காவது முறையாகவும் உலக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற இறுதிப் போட்டியில்இ நடப்பு சம்பியனான மேக்னஸ் கார்ல்சென், அமெரிக்காவின் ஃபபியானோ கருணாவை எதிர்கொண்டார்.

இதில் மேக்னஸ் கார்ல்சென் நடப்பு சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும், 26 வயதான கருணாஇ 1972ஆம் ஆண்டு பாபி ஃபிஷருக்குப் பிறகு உலக சம்பியன் பட்டம் வெல்லும் அமெரிக்க வீரர் என்கிற பெருமையை அடைய வேண்டுமென்ற இலக்கிலும் போட்டியிட்டனர்.

இருவரும் 12 போட்டிகளில் மோதி சமநிலையை அடைந்தனர். இதன்பின்னர் இருவரும் ரேபிட் டைபிரேக் போட்டியில் விளையாடினர்.

போட்டியின் பிரகாரம் அதிவிரைவு நேரக் கட்டுப்பாடு கொண்ட 4 போட்டிகளில் இருவரும் விளையாடுவார்கள்.

இந்த போட்டியில் 25 நிமிடங்களும், ஒரு வீரருக்கு காய் நகர்த்துதலுக்காக கூடுதலாக 10 வினாடிகளும் வழங்கப்படும்.

இதன்மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

இந்நிலையில்இ டை பிரேக் போட்டியில் 3-0 ரீதியில் வென்று மீண்டும் உலக சம்பியன் பட்டத்தை மேக்னஸ் கார்ல்சென் சுவிகரித்தார்.

27 வயதான கார்ல்சன். 2013ஆம் ஆண்டு இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்தைத் தோற்கடித்து முதல் முறையாக உலக சம்பியன் பட்டத்தை வென்றார்.

மீண்டும் 2014ஆம் ஆண்டு ஆனந்தைத் தோற்கடித்து உலக சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார்.

2016ஆம் ஆண்டு செர்ஜி கர்ஜாகின்னை வென்றவர்இ தற்போது கருணாவையும் வென்று நான்காவது முறையாக உலக சம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *