ஜோர்ஜிய ஜனாதிபதித் தேர்தலில் பெண் வேட்பாளருக்கு வெற்றி

Share Button

ஜோர்ஜிய ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக சலோமி ஸூராபிஷ்விலி அறிவித்துள்ளார்.

ஏறத்தாழ சகல வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் சலோமி ஸூராபிஷ்விலி அம்மையார் 66 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் பெண்மணி பிரான்ஸில் பிறந்து ஜோர்ஜியாவின் வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியவர். இவர் ஆளும் ஜோர்ஜிய கனவு கட்சியின் ஆதரவை வென்றிருந்தார்.

ஜோர்ஜியாவின் முதலாவது பெண் ஜனாதிபதி என்ற பெருமை சலோமி ஸூராபிஷ்விலியை சாரும்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *