மொரகஹகந்த நீர்த்தேக்கம்:ஜனாதிபதி தலைமையில் இன்று திறப்பு!

Share Button

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதலைமையில் இன்று முற்பகல் திறந்து வைக்கப்படவுள்ளன.

இது நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய பல்நோக்குஅபிவிருத்தித் திட்டமான மொர-கஹ-கந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் ஒரு கட்டமாகும்.

மொர-கஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஜனாதிபதிநீர்த்தேக்க திட்டத்தின் வளாகத்தை இன்று சென்று பார்வையிடுவார்.

ரஜரட்ட மக்களின் நலன்கருதி ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உதித்ததும், துரித மஹாவலிஅபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டதுமான இறுதி நீர்ப்பாசன திட்டம் மொர-கஹ-கந்த நீர்த்தேக்கமாகும்.

இந்தத் திட்டம் 2007ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது 2015 ஆம் ஆண்டுஜனாதிபதியின் வழிகாட்டலுடன் புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்பட்டது.

கொங்கீரிட் அணை, மண் அணை, கருங்கற்கள் நிரம்பிய மூன்று அணைகள் ஆகியவற்றுடன் கூடியஇலங்கையின் ஒரேயொரு நீர்த்தேக்கம் இதுவாகும்.

21 ஆம் நூற்றாண்டின் நீர்ப்பாசன அதிசயம் எனமொரகஹகந்த நீர்த்தேக்கத் திட்டம் வர்ணிக்கப்படுகிறது.

இதன் மொத்த கொள்ளளவு ஆறரைஇலட்சம் ஏக்கர் அடியைத் தாண்டுகிறது. இது பராக்கிராம சமுத்திரத்தை விட நான்கு மடங்குஅதிகமாகும்.

இந்தத் நீர்த்தேக்கத்தின் மூலம் 82 ஆயிரம் ஹெக்டெயர் விளைநிலத்திற்கு பாசனவசதிகளை வழங்க முடியும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வடமத்திய, வடமேல், கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கும் வகையில்இரண்டாயிரம் குளங்களுக்கு நீரை விநியோகிக்கக் கூடியதாக இருக்கும்.

இதன்மூலம் மூன்றுமாகாணங்களிலும் மூன்று இலட்சம் ஏக்கர் காணியில் பயிர்ச்செய்கை மேற்கொண்டு,15 ஆயிரம்குடும்பங்களுக்கு நன்மை பயக்கலாம்.

மேலும் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர்கிடைக்கிறது.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நீர் மின்வலு உற்பத்தி செய்யப்பட்டு வருடம்தோறும் தேசிய மின்சார வலைப்பின்னலில் 25 மெகா வோட்ஸ் மின்வலு சேர்க்கப்படுகிறது.

இதன்மூலம் ஒவ்வொரு வருடமும்33 கோடி ரூபாவுக்கு மேலான எரிபொருள் செலவினத்தை கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை மேற்கொண்டு 22 கோடிரூபாவுக்கு மேலான வருமானத்தையும் ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2