பிரதமர் மோடி சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார்!

Share Button

ஆர்ஜெண்டீனா சென்றுள்ள பிரதமர் மோடி சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை இன்று(30) சந்தித்துள்ளார்.

ஜி-20 நாடுகளின் 13 ஆவது உச்சி மாநாடு ஆர்ஜெண்டீனா நாட்டின் தலைநகர் புய்னோஸ் எய்ரேஸ் நகரில் இன்று தொடங்கியுள்ளது.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜெண்டீனா சென்றுள்ள பிரதமர் மோடி மாநாட்டுக்கு இடையே சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது இருநாட்டு பொருளாதார உறவை ஊக்கப்படுத்துதல் கலாசாரம் மற்றும் எரிசக்தி துறையில் உறவை வலுப்படுத்துவது போன்ற விடயங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தில் முதலீடுகளை அதிகப்படுத்துதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு போன்ற துறைகளில் முதலீடுகளை அதிகப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் நடைபெற்ற சந்திப்பு பயனுள்ள வகையில் இருந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா குத்தேரஸ்சை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு தலைவர்களும் பருவநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசித்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-06 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 178
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 139
புதிய நோயாளிகள் - 2
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 259
நோயிலிருந்து தேறியோர் - 33
இறப்புக்கள் - 5