ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது அச்சுறுத்தலானது!

Share Button

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறினால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சர் பென் வொலஸ் (Ben Wallace) தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பாதுகாப்பு ஐரோப்பாவின் பாதுகாப்போடு பிணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தெரேசா மே முன்வைத்துள்ள ஒப்பந்தம் அனைவரையும் பாதுகாத்து தேவையான சமநிலையை உருவாக்குகிறது எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.

லண்டனில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியின் சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு தலைவர்களுக்கான உரையில் அவர் உரையாற்றினார்.

பிரித்தானியாவை சூழ்ந்துள்ள கடலால் மாத்திரம் 21 ஆம் நூற்றாண்டின் பயங்கரவாதம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கமுடியாது எனவும் அவர் எதிர்வு கூறினார்.

நாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுவது அவசியமென்பதாக பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.

தற்போதைய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அது நிச்சயமற்ற தன்மையையும் அதிக ஆபத்தையும் உருவாக்குமெனவும் பொதுமக்களை பாதுகாக்கும் திறனைக் குறைப்பதற்கான வாய்ப்ப்புக்கு அது வழிவகுக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *