கிழங்கு உற்பத்தி: வழங்கப்பட வேண்டிய மீதித் தொகைக்கு அமைச்சரவை அனுமதி.

Share Button

ஊவா மாகாணத்தில் கிழங்கு வகை உற்பத்தியாளர்களின் உற்பத்திகளுக்காக வழங்கப்பட வேண்டிய மீதத் தொகையான 75 மில்லியன் ரூபாவை இலங்கை நுகர்வோர் சங்கத்திடமிருந்து பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது.

விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையில் இடைத் தரகர்கள் எவரும் இல்லாமல் சமுர்த்தி கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் மூலம் கிழங்கு உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை
கிடைத்துள்ளது.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் கிழங்கு உற்பத்திகளுக்கான
நியாயமான விலையை உறுதிப்படுத்தும் நோக்கில் கிழங்கு உற்பத்தி ஒழுங்குறுத்தல் விவசாய சங்கம் மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம் ஆகியன இணைந்து இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்ட்டன் பெர்னாண்டோவுக்கு விளக்கமூட்டிய பின்னர் ஜனாதிபதிக்கும் பிரதம மந்திரிக்கும் இதுவிடயம் தொடர்பில் விளக்கமூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *