ஜனாதிபதி அமைத்த அரசாங்கம் ஒருபோதும் திருப்பிக் கொடுக்கப்படாது!

Share Button

ஜனாதிபதி அமைத்த அரசாங்கம் மீண்டும் ஒருபோதும் திருப்பி வழங்கப்பட மாட்டாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணி மஹரகமவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர்
இதனைத் தெரிவித்தார்.

வானவில் சதி முயற்சியின் பின்புலம் என்ன என்பது இந்தச் சந்திப்பின் தொனிப்பொருளாகும்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சீரான முறையில் இடம்பெற்று வருவதாகவும் மூன்றாவது தடவையாக எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும்
சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சியினர் கதிர்காமம் வரை பாதயாத்திரை செல்வதாக தெரிவிததுள்ளனர்.

அவர்களின் கோரிக்கையை கடவுள்கூட ஏற்றுக்கொள்ள மாட்டார் என குறிப்பிட்டார்.

அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றுகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தமிழ்த தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான இணக்கப்பாடு தற்போது அம்பலத்திற்கு வந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இந்த மாதம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு சமஷ்டி ஆட்சிக்கான அனுமதியைத் தருவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன் அடிப்படையிலேயே அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பாக செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் உதயகம்மன்விலவும் அங்கு உரையாற்றினார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *