முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன

Share Button

முச்சக்கர வண்டிகளின் குறைந்தபட்ச கட்டணம் இன்று முதல் 50 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுயதொழில் முயற்சியாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சம்மேளனத் தலைவர் சுனில் ஜயவர்த்தன தெரிவித்தார். ஒக்ரெய்ன் 92 வகையைச் சேர்ந்த ஒரு லீற்றர் பெற்றோலின் விலை அண்மையில் மேலும் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, பஸ் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அகில இலங்கை தனியார் பஸ் கம்பனிகளின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெறும் விசேட பேச்சுவார்த்தையின் பின்னர், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்படும். கடந்த வாரம் டீசலின் விலையை மீண்டும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் பயன் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. 111 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலை 106 ரூபாவாக குறைக்கப்பட்ட அதேவேளை, 136 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசல் புதிய 131 ரூபாவாகவும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *