அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய சேவையை முன்னெடுக்கவும்! ஜனாதிபதி

Share Button

பிரதமருக்கும், அமைச்சரவைக்கும் கடமைகளை மேற்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியிருந்தாலும், சகல அமைச்சுக்களின் பணிகளையும் வழமையான முறையில் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் கருத்து வெளியிட்டார்.

அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைய, தடையின்றி, மக்கள் சேவையை முன்னேற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பையும், பொதுமக்களுக்கான சேவையையும் பொறுப்புடன் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் பணிப்புரை வழங்கியிருக்கிறார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *