பாராளுமன்ற கலைப்பு: உயர் நீதிமன்ற மனுக்கள் மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று!

Share Button

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெளியிட்ட பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெறுகிறது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மனுவை விசாரிக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

தேர்தலை நடத்துவதற்கு எதிராக உயர் நீதிமன்றம் விதித்த தற்காலிகத் தடை உத்தரவு எதிர்வரும் 7ஆம் திகதி வரை பொருந்தும்.

 

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *