அரச பொறிமுறையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது!

Share Button

அரச பொறிமுறையை நிலையானதாக முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன கவனம் செலுத்த வேண்டுமென களனி பல்கலைக்கழத்தின் தொடர்பால் கல்விப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் சமன் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடு சீhகுலைந்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவர்கள் பொறுப்புடன் செயற்படுவதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது நிலையத்தில் இடம்பெற்ற சுபாரதி நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

அரசியல் யாப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரத்திற்கு இடையில் நிலவும் பிரச்சினை நீதிமன்றம் வரை செல்வதற்கு இடமளித்தமை நாட்டுக்கு சிறப்பானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை திறந்த பல்கலைகழத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நெம்சிறி ஜயதிலக கருத்து தெரிவிக்கையில் 1977 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு, கடந்த காலத்தில் திரிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்கத்திய கலாசாரத்திற்கு உட்பட்டுள்ள திரு.ரணில் விக்ரமசிங்கவினால் தேசிய கலாசாரம் பாதுகாக்கப்படுவதை எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *