பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Share Button

நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரதமரின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் புதிய அமைச்சரவைக்கு இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில் பாராளுமன்றத்தை கூட்டியதன் ஊடாக சபாநாயகர் நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என குற்றம் சாட்டி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

சட்டத்தரணி லக்சிறி இந்த அடிப்படை உரிமை மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதியின் பாராளுமன்றத்தை கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமராக மகிந்த ராஜபக்ஷவையும், அமைச்சரவையும் நியமிக்க ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு முன்வைக்கப்பட்ட இரண்டு மனுக்கள் மீதான விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *