நாட்டில் சந்தர்ப்பவாத அரசியல் குழுக்களே காணப்படுகிறது!

Share Button

நாட்டில் உண்மையான அரசியல் கட்சிகள் அன்றி, சந்தர்ப்பவாத அரசியல் குழுக்களே
காணப்படுவதாக கலாநிதி டியூடர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் தேவைகளை நிறைவேற்றும் அரசாங்கம் அன்றி, நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அரசாங்கமே தேவைப்படுவதாக கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜகத் வெல்லவத்த தெரிவித்துள்ளார்.

மக்களின் இறைமை முக்கியமானதாகும். நாட்டை நேசிப்பவர்களுக்கே வாக்களிக்க வேண்டும்.

போதைப் பொருள், பாலியல் தொல்லைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள், மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உறுதியான அரசாங்கம் அவசியமாகும்.

இவ்வாறான நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண தேர்தல் அவசியம் என்றும் ஜகத் வெல்லவத்த வலியுறுத்தினார்.

இலங்கையில் தற்சமயம் இன நெருக்கடிகள் கிடையாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி டியூடர் வீரசிங்க தெரிவித்தார்.

நாட்டில் உண்மையான அரசியல் கட்சிகள் இல்லை என்றும், சந்தர்ப்பவாத அரசியல் குழுக்கள் மாத்திரமே நாட்டில் காணப்படுவதாகவும் கலாநிதி வீரசிங்க கூறினார்.

மக்களின் இறைமையை பாதுகாப்பதற்கான புதிய பொறிமுறை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11