TNA,ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு 117 வாக்குகள்!

Share Button

பாராளுமன்றத்தின் அடிப்படை சம்பிர்தாயங்களை மதிக்காமல், அரசாங்கத்தை புறக்கணித்து இன்றைய தினம் தனியொரு தரப்பு பாராளுமன்ற அமர்வை நடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

இன்றை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் என்ற ரீதியில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நிபந்தனையுடன் ஆதரவு அளித்தது. கடந்த காலத்தில் இரு கட்சிகளும் பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டியிருந்தன.

இந்த இணக்கப்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டுமென திரு.டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவும் இது பற்றி கருத்து வெளியிட்டார்.

வெளிநாட்டுத் தூதுவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் தாம் ஜனநாயகத்திற்காக போராடுபவர்கள் என்று கூறிக்கொள்ளும் குழுக்கள் தற்போதைய சிக்கல் ஏற்பட்ட நாள் தொடக்கம் எவ்வாறு செயற்பட்டன என்பதை மக்கள் அறிவார்களென திரு.ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

இத்தகைய குழுக்கள் தொடர்ந்தும் செயற்படும் விதம் அபாயத்தை உணர்த்தி நிற்பதாக அவர் கூறினார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11