வளர்ந்துவரும் அணி:ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டிகள் இன்று!

Share Button

ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி திட்டமிட்டவாறு நடைபெறும் என தேர்தல் குழு அறிவித்துள்ளது.

எந்த வகையிலும் தேர்தலை பின்போடப் போவதில்லை என குழுவின் தலைவராக முன்னாள் மேன் முறையீட்டு நீதிபதி சந்ரா ஜயதிலக்க தெரிவித்தார்.

நேற்றைய கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, நாளைய தினத்திலும், 17ஆம் திகதியும் வேட்பு மனுக்களை கோரவிருப்பதாக திரு ஜயதிலக்க தெரிவித்தார்.

எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதிக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கட்டிற்கான தேர்தலை நடத்தப் போவதாக சர்வதேச கிரிக்கட் பேரவைக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் பேரவையின் அங்கத்துவத்தையும், ஒருகோடி டொலருக்கும் மேலான நிதியுதவியையும் இழக்க நேரிடும்.

அத்துடன், எதிர்வரும் உலக் கிண்ண சுற்றுத்தொடரில் இலங்கை அணி பங்கேற்கக்கூடிய வாய்ப்பையும் இழக்கக்கூடும் என ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *