பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருகை வழமைக்குத் திரும்புகிறது!

Share Button

தோட்டத் தொழிலாளர்களின் வருகை தற்போது சாதாரண நிலைக்குத் திரும்புவதாக பெருந்தோட்டச் சங்கத்தின் பணிப்பாளர் லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று தொழிலுக்குத் திரும்பாத பணியாளர்கள் இன்று சேவைக்கு சமூகமளித்துள்ளனர்.

வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியில் நாளொன்றிற்கு 250 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வொன்றுக்கு வந்து இந்த மாத இறுதிக்குள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எதிர்பார்த்திருப்பதாகவும் லலித் ஒபேசேகர தெரிவித்தார்.

பெருந்தோட்டச் சங்கங்கள் முன்வைத்துள்ள தொள்ளாயிரத்து 40 ரூபாவை வழங்குவற்கு பணியாளர்கள் விரும்பம் வெளியிட்டால் ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரத்து 375 ரூபா மேலதிக கொடுப்பனவாக வழங்க முடியும்.

தற்போதைய நிலையில் ஒரு கிலோ தேயிலையின் உற்பத்தி விலை 630 ரூபா தொடக்கம் 640 ரூபாவாக காணப்படுகின்ற நிலையில், ஒரு கிலோ 560 ரூபா தொடக்கம் 575 ரூபா வரையில் விற்கப்படுகின்றன.

அதன்படி, தமது சங்கம் முன்வைத்துள்ள வேதன அதிகரிப்பிற்கு மேலதிகமான கொடுப்பனவை வழங்க முடியாது எனவும் ஒபேசேகர குறிப்பிட்டார்.

தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்தம் அடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கக் கோரி கடந்த நான்காம் திகதி தொடக்கம் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தொழிலாளர்களின் வேதன விடயத்தில் உரிய தீர்வு எட்டப்படும் என ஜனாதிபதி அளித்த வாக்குறுதிக்கு அமைய தொழிலாளர்களை மீள பணிக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *