பிரதமர்-அமைச்சர்கள்: இடைக்கால தடைக்கு எதிரான மனுகள் மீதான விசாரணை இன்று!

Share Button

திரு.மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களாக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது.

திரு.ராஜபக்ஷ பிரதமராக செயற்படுவதையும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாககடமையாற்றுவதையும் தடுக்கும் வகையில் மேன் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலதடை உத்தரவை நீக்குமாறு கோரி மேன் முறையீட்டு மனுக்கள் தாக்க செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுவை மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் சில தினங்களுக்கு முன்னர் பிரிசீலனைக்குஎடுத்துக் கொண்டது.

பிரதிவாதிகளுக்கு முறையாக அழைப்பாணை வழங்கப்படாமை, அழைப்பாணை கிடைக்காமை ஆகிய காரணங்களின் அடிப்படையில் மனு மீதான விசாரணைவரை பின்போடப்பட்டது.

இந்த விசேட மேன்முறையீட்டு மனுவில் திரு.ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியகட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு.

மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றஉறுப்பினர்கள் 122 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

 

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *