அமைச்சரவை மீதான இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிப்பு!

Share Button

            பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடைஉத்தரவை, தொடர்ந்தும் முன்னெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை நிறைவடையும் வரையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை கைவிடவும் உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றம்வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டுமனுவை மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் விசாரணை செய்தது.

இந்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 16ஆம், 17ஆம்,18 ஆம் திகதிகளில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை செய்யப்படும்.

 ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில் இந்த மனு தொடர்பான விசாரணை இடம்பெறவுள்ளது.

 

 

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *