மிசிசாகாவில் தீப்பரவல் பெண்ணொருவர் ஆபத்தான நிலையில்!

Share Button

மிசிசாகாவில் இடம்பெற்ற தீப்பரவல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் பெண்ணொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Osprey Boulevard மற்றும் Trelawny Circle பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று முன்தினம் பிற்பகல் 3.40 அளவில் இந்த தீப்பரவல் சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் அங்கிருந்து மீட்டுள்ளதனை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது நபரும் பின்னர் மீட்கப்பட்டதாகவும், அவரின் உடல்நிலை ஓரளவு சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தீப்பரவல் மாலை 4.15 அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11