உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து முன்னேற்றம்

Share Button

சீனாவில் நடைபெற்று வரும் 2018 ஆம் ஆண்டு உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பெண்களுக்கான பிரிவில் உலக தரவரிசையில் 6 ஆவது இடத்துள் இருக்கும் பிவி சிந்து முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றார்.

இதனை அடுத்து இன்று நடைபெற்ற 3-வது போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஷாங் பீவென் எதிர்கொண்டார்.

இதில் பிவி சிந்து 21-9, 21-15 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *