நீதியி;ன் குரல் என்ற ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் காலி முகத்திடலில் இடம்பெறுகிறது.

Share Button

நீதியி;ன் குரல் என்ற ஐக்கிய தேசிய முன்னணியின் மக்கள் பேரணி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் காலி முகத்திடலில் இடம்பெறுகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆதரவாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள். அரசியல் சதியினால் நாட்டின் மீத இருந்த சர்வதேசத்தின் நம்பிக்கை இல்லாமல் போனதான நிகழ்வில் உரையாற்றிய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி வன்முறையை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டார்கள். பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க சபாநாயகர் கரு ஜயசூரிவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். நீதிமன்றங்கள் சுயாதீனமாக தீர்வுகளை வழங்கும்போது அவற்றின் சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நாட்டின் அரசியல் யாப்பையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். இன,மத பேதங்கள் இன்றி இதற்காக மக்கள் போராடினார்கள் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *