வடக்கு, கிழக்கு காணிகளை ஜனாதிபதி பணிப்புரையின் கீழ் விடுவிக்க நடவடிக்கை

Share Button

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் வசமிருந்த 263 ஏக்கருக்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தப் பணி நிறைவடையவுள்ளது. இதற்கு முன்னர் இராணுவத்தினரின் வசமிருந்த 69 ஆயிரத்து 754ற்கும் அதிகமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 2009ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இராணுவத்தினரின் வசமிருந்த அரச காணிகளில் 79 சதவீதமானவையும், தனியார் காணிகள் 90 சதவீதமானவையும் விடுவிக்கப்பட்டுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *