பாடசாலை சீருடைத் துணிகளுக்கான வவுச்சரின் கால எல்லை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிப்பு

Share Button

புhடசாலை சீருடைத் துணிகளை பெற்றுக் கொள்வதற்கான வவூச்கர்களை மூன்றாம் தவணை விடுமுறை முடிவடைய முன்னர் உரிய பாடசாலைகளுக்கு அனுப்பமாறு அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சர் கடமைகளை ஏற்றுக் கொண்டதன் பின்னர் இவர் இந்த பணிப்புரையை வழங்கினார். டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை கால எல்லை விதிக்கப்பட்டிருந்த வவுச்சர்களுக்கான காலத்தை பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார். நவம்பர் மாதம் 5 ஆம் திகதிக்குள் வவுச்சர்கள் வழங்கப்படவிரு;நததாகவும், கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாடுகளினால் இந்தப் பணி சீர்குலைந்ததாகவும் அமைச்ச்ர் கூறினார். இதேவேளை பாடசாலை மாணவர்;களுக்கான பாடப்புத்தகங்களை , பாடசாலை விடுமுறை முடிவடைவதற்கு முன்னர் வழங்;குமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். பாடசாலைக் கல்விக்காக தேசிய கொள்கைளை வகுத்துச் செயற்பட்டதாகவும், கல்வியுடன் அரசியலை தான் ஒரு போதும் இணைத்துக் கொள்ளவில்லை என்று அவர் வலியுறுத்தினார். பாடசாலைப் பாடப் புத்தகங்களில் இடம்பெற்றிருந்த கல்வி அமைச்சரின் செய்தியில் கடந்த ஆட்சியாளர்கள் நிராகரித்தமை பற்றி அமைச்சர் கவலை வெளியிட்டார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11