நாட்டிற்காக ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்
நாட்டுக்காக ஜனாதிபதியும், பிரதமரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென மலைநாட்டு, புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். தமது அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்ற அவர் இதனை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். மலைநாட்டு மக்கள் 200 வருடங்களாக வீடற்றவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் கஷ்டங்களை தான் நன்கு உணர்ந்தவன் என்ற வகையிலேயே கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்களுக்கு ஏழு பேச் காணியில் தனி வீடு அமைக்கும் திட்டத்தை கோரிக்கையாக முன் வைத்ததாக அவர் குறிப்பிட்டார். அதன்படி தனிவீட்டு வேலைத்திட்டங்கள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் ஜனாதிபதி தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்களை புறம் தள்ளி நாட்டின் நலன் கருதி செயற்பட முன்வர வேண்டுமென்று அமைச்சர் திகாம்பரம் தெரிவித்தார்.