பஸ் கட்டண குறைப்பின் அனுகூலங்களை பொதுமக்களுக்கு வழங்காத பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது

Share Button

பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் பஸ் கட்டணங்களை குறைத்தபோதும், இன்னும் பஸ் கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரவில்லையென பயணிகள் முறையிடுகின்றனர். கடந்த புதன்கிழமை நள்ளிரவு முதல் பஸ் கட்டணங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருந்தபோதும் நேற்று பல வீதிகளில் கட்டணக் குறைப்பு அமுல்படுத்தப்படவில்லை. அது தொடர்பில் பஸ் வண்டிகளின் நடத்துனர்க்ள தெளிவூட்டப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்தார். பிரயாணிகளின் முறைப்பாடு தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் கட்டணக் குறைப்பிற்கு மாறாக செயற்படுமிடத்து அந்த பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *