மன்னார் மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்கு காணாமல் போனோர் அலுவலகம் நிதி உதவி வழங்குகிறது

Share Button

மன்னார் மனித புதைகுழி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகளுக்கு காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் உதவி வழங்குகிறது. அதன்படி கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையான குறித்த மனித புதைகுழியில் இருந்து பெறப்பட்ட ஆறு மாதிரி எலும்புகள் ரேடியோ காபென்; டேற்றிங்குக்காக தெரிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன. ரேடியோ காபென் டேற்றிங் தொழில்நுட்பத்தின் ஊடாக எலும்பு மற்றும் பல் மாதிகளில் அடங்கும் காபன் பெறுமதியை மதிப்பிட முடியும்.

ரேடியோ காபென் டேற்றிங்குக் தேவையான நிதியை தமது நிறுவனம் வழங்குமென

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்தார். கடந்த ஜூலை மாதம் தொடக்கம் அகழ்வுப் பணியில் ஈடுபடும் குழுவினருக்கு தேவையான வசதிகளை தமது அலுவலகம் வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 118 நாட்களில் 288 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருப்பதாக மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *